அமைதியின் வடிவங்கள்...
எட்டி எட்டி சென்றாலும்
தொட்டு விட முடியா
வானம் அமைதியின் வடிவம்,
கண்களால் கணித்து
எண்களால் சொல்லி விட முடியா
கடல் அமைதியின் வடிவம்,
உயர்ந்து ஊமையாய்
வளர்ந்து நிற்கும்
மலை அமைதியின் வடிவம்,
மெல்ல வருடி
செல்லமாய் தொட்டுச்செல்லும்
தென்றல் அமைதியின் வடிவம்,
கிளைபரப்பி
விளைநிலம் தளைக்க
வளைந்து நெளிந்துச்செல்லும்
நதி அமைதியின் வடிவம்,
ஆடிப்பாடி ஆசைதீர
பாசங்கு செய்து
படம் காட்டும் உலகில்
அடக்கமுடையார் அமைதியின் வடிவம்,
....................
ஆயின்,
அமைதியின் வடிவங்கள்
சீற்றம் கொண்டால்,
வானம்
மனம் வெடித்து
இடிமழையாய் மாறும்...
கடல்
கடுப்பெடுத்து
சுனாமியாய் சீறும்...
மலை
மதம் கொண்ட
எரிமலையாய் ஏறும்...
தென்றல்
வெறிகொண்ட
சூறாவளியாய் சேறும்...
நதி
அமைதியிழந்து
வெள்ளமாய் ஊறும்...
அடக்முடையான்
ஆவேசப்பட்டால் அவன்
சரித்திர
சாதனை வீரனாகிறான்...
அப்புத்தளை அப்பாஸ்

😀
பதிலளிநீக்கு