கணவனே உனக்கோர் காதல் பா...

நம் பார்வைகளின்
புணர்ச்சி காதலானது,
இடியுடன் கூடிய
காதல் மழையில்
இதயம் நனைந்தது,

கண்ணீர் ,கவலையின்றி
காதலர்கள் இணைந்ததுண்டோ?
இதயங்களை பிரிக்க
போட்ட முள்வேளியில்
தோத்தனர் மூத்தோர்..

மகர் கொடுத்து,முடிபிடித்து
கரம் பிடத்தான்
காதலன் கணவனாய்.
காதலும்,காமமும்
இணைந்தது...

தொல்லைகளால் துவண்டு
போகும் போதெல்லாம்
தோழனாய் தோள்கொடுப்பாய்,

காதலிப்பதில் எப்போதும்
முதலிடம் நீ...
கடுகடுவென சண்டைப்படிப்பதில்
முதலிடம் நான்...

கணவனே உனக்கோர்
காதல் பா...
ஓரறையில் ஒன்றாய்
வாழும் நாம்
மண்ணறை சுவனத்திலும்
காதலர்களாய் உலா வர
இறைவா அருள் தா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்