யாவும் கற்பனை

கடல் மீது
நடந்து
வானை 
எட்டிப்பிடிக்கிறேன்.

மைதான வானில்
விளையாடி
பரிதி பந்தை
அடிக்கிறேன்.

மலர் மீது கண்
மலர்ந்து
தேனருந்தி
தேனீக்களுடன் கதை
பேசுகிறேன்.

நிலா மீது
அமர்ந்து
நட்சத்தரங்களின்
தூசு தட்டுகிறேன்.

வானவில்
குடை பிடித்து
முத்து மழைத்தளிகளால்
மாலை கட்டுகிறேன்.

நீர் வீழ்ச்சியில்
சருக்கு மரமேறி
மலைகளுடன்
தலையணை சமர்
செய்கிறேன்.

நதி வழி
பயணிக்கிறேன்
நந்தவன அழகு
மாளிகையைத் தேடி.

நிரந்தரமற்ற உலகில்
அருத்தமின்றி
பொருத்தமின்றி
உலகோர்
உருவாக்கிய 
ஊமை வலிகளுக்கு
கற்பனைகள்
கசாயமாகின்றன.

        அப்புத்தளை அப்பாஸ்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்