பெண்மையின் ஆசை...
பெண்குழந்தை பிறந்ததும்
பொன்னாய் போற்றும்
சமுகம்
பெண்மையின் ஆசை...
என் தேவதை என்ற
தந்தையின் தாலாட்டு
பெண்மையின் ஆசை...
கல்வியில் கண்ணி
கண் திறப்பதும்
பெண்மையின் ஆசை...
இருச்சுடராய் மாறி
சூரியனாய் குடும்ப வாழ்விலும்,
சந்திரனாய் தொழில் வாழ்விலும்
ஒளி வீசுவதும்
பெண்மையின் ஆசை...
முதல் காதலை
வெட்கித் தலை குனிந்து ஏற்று
வெட்கத்துள் மறைப்பதும்
பெண்மையின் ஆசை...
கல்யாண உலகுள்
கனவுகளோடு நுழைவதும்
பெண்மையின் ஆசை...
மாமியார் மறுதாயாய்
மாறி வரும் வரமும்
பெண்மையின் ஆசை...
தவமிருந்து தாய்மை
அடைவதும்
பெண்மையின் ஆசை...
நதியாய்
நாலுபேர்க்கு
நல்லது செய்து
தொல்லைகளை சகித்து
வாழ்வதும்
பெண்மையின் ஆசை...
ஆன்மீகத்தில் உயர்ந்து
ஆண்டவனை அடைய
ஆசையோடு
மண்ணறை செல்வதும்
பெண்மையின் ஆசை...
பொன்னாய் போற்றும்
சமுகம்
பெண்மையின் ஆசை...
என் தேவதை என்ற
தந்தையின் தாலாட்டு
பெண்மையின் ஆசை...
கல்வியில் கண்ணி
கண் திறப்பதும்
பெண்மையின் ஆசை...
இருச்சுடராய் மாறி
சூரியனாய் குடும்ப வாழ்விலும்,
சந்திரனாய் தொழில் வாழ்விலும்
ஒளி வீசுவதும்
பெண்மையின் ஆசை...
முதல் காதலை
வெட்கித் தலை குனிந்து ஏற்று
வெட்கத்துள் மறைப்பதும்
பெண்மையின் ஆசை...
கல்யாண உலகுள்
கனவுகளோடு நுழைவதும்
பெண்மையின் ஆசை...
மாமியார் மறுதாயாய்
மாறி வரும் வரமும்
பெண்மையின் ஆசை...
தவமிருந்து தாய்மை
அடைவதும்
பெண்மையின் ஆசை...
நதியாய்
நாலுபேர்க்கு
நல்லது செய்து
தொல்லைகளை சகித்து
வாழ்வதும்
பெண்மையின் ஆசை...
ஆன்மீகத்தில் உயர்ந்து
ஆண்டவனை அடைய
ஆசையோடு
மண்ணறை செல்வதும்
பெண்மையின் ஆசை...
கருத்துகள்
கருத்துரையிடுக