மணக்கும் மணவாழ்க்கை
மூன்று முடிச்சில் இல்லறம் நல்லறம், பிறந்த வீடு, புகுந்த வீடு என மூன்றையும் கெட்டியாய் மாதர் பிடித்தால் மணக்கும் மணவாழ்க்கை... மாமியாராய் பாராமல் அன்பானவனை தனக்கு தந்த அன்னையாய் பார்த்தால் மணக்கும் மணவாழ்க்கை... தன் உடன்பிறப்பை தலையில் தாங்கும் தருணம் கணவனின் உடன்பிறப்பையும் மனதில் தாங்கினால் மணக்கும் மணவாழ்க்கை... உண்ணுவதும் உடுத்துவதும் உறைவதும் ஊர்மெச்சலுக்காயன்றி வரவுக்கு வாழ்ந்தால் மணக்கும் மணவாழ்க்கை... இன்பத்திலும் துன்பத்திலும் இல்லாள் இன்மனதோடு உறவாடினால் மணக்கும் மணவாழ்க்கை... கூடிவாழ்ந்தால் கோடி இன்பம் என உறவுகளை தேடி வாழ்ந்தால் ஓடி போகும் துன்பம் அப்போது மணக்கும் மணவாழ்க்கை... விட்டுக்கொடுப்பதில் விண்ணாய், பொறுமைக்கு பொன்னாய் , கரிசனையில் கண்ணாய், கணவன் மெச்சும் பெண்ணாய் வாழ்ந்தால் மணக்கும் மணவாழ்க்கை...