2026
புதிய ஆண்டு
புலர்ந்தது//
புதுமை என்று
மலர்ந்தது//
வருடம் ஒன்று
சென்றதால்//
புது வருடம் என்று
வந்தது//
உள்ளம் எல்லாம் கருணை
துளிர்க்கட்டும்//
உயிர்கள் மீது மனிதநேயம்
செழிக்கட்டும்//
ஒற்றுமையில் மனிதம்
ஓரினமாய் மாறட்டும்//
இயந்திர வாழ்க்கை முறை
குறையட்டும்//
இயற்கையோடு இணைந்து இன்பம்
நிறையட்டும்//
கணினி அறைக்குள் கழியும்
கணப்பொழுதுகள் கழியட்டும்//
களிப்புடன் சூழலை
நேசித்து திரியட்டும்//
முதியோர் இல்லங்கள்
மறையட்டும்//
மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்
ஆகட்டும்//
உயிர்கொல்லும் உடனடி
உணவுகள் தொலையட்டும்//
வீட்டு உணவே
மருந்து ஆகட்டும்//
மாடிவீட்டு மந்திரியும்,
குடிசை வீட்டு மாமாவும்
மண்ணில் விதைகள்
விதைக்கட்டும்//
அனைவர் மனதிலும்
அன்புடன் மனிதநேயம்
அழகிய விருட்சமாய் வளரட்டும்//
கருத்துகள்
கருத்துரையிடுக