இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலரின் மௌனம்( பாகம் 6)

படம்
  காலம் கரைந்து ஓடியது… வறுமையின் வாசலில் தொடங்கிய அந்தக் குடும்ப வாழ்க்கை, மெதுவாக ஒவ்வொருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் சென்றது. வீட்டின் நான்கு ஆண் பிள்ளைகளும் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்று குடும்பச் சுமையைத் தாங்கினர். அவர்களின் உழைப்பில் தம்பிமார் இருவரும் பள்ளிக்குச் சென்றார்கள். ஆனால் கைப்பிள்ளைக்கு மட்டும் படிப்பு என்றாலே பிடிக்கவில்லை. எழுத்துக்கள் அவன் மனதில் பதியவே இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டான். அந்தக் காலத்தில் பீபிக்கும் கல்வியின் முக்கியத்துவம் முழுமையாகப் புரியவில்லை. “வாழ்க்கை ஓடினால் போதும்…” என்ற எண்ணமே அவளின் மனதில் இருந்தது. காலம் மெதுவாக ரசாக்கையும் வாலிபப் பருவத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. பீபியின் வீட்டில் எல்லோரையும் விட அழகாகத் தோன்றியது ரசாக்தான். அழகு மட்டுமல்ல… அவனிடம் ஒரு தனி ஸ்டைல் இருந்தது. ரசாக் நடந்து வந்தாலே தெருவே திரும்பிப் பார்க்கும். சுருட்டையான தலைமுடி… அழகாக அணிந்த சேட்… இரு கைகளும் முழங்கை வரை நேர்த்தியாக மடிக்கப்பட்டிருக்கும். சேட்டின் பொக்கட்டிலிருந்து சற்று வெளியே தெரியும் தாள் காசுகள் க...

மலரின் மௌனம்(தொடர் கதை)

படம்
  மலரின் மௌனம் பாகம் 6 வெகுவிரைவில்....

சொந்த முள்ள வாழ்க்க செர்கத்துக்கும் மேல

  https://youtu.be/QEPgBVStsMM?si=9PfogzK2JPIBGHbA

மலரின் மௌனம் (பாகம்-5)

படம்
  ரசாக்கும் அவனது அண்ணன்மார்களும் சிறுவயது முதலே உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். வயதில் சிறுவர்களாக இருந்தாலும், வாழ்க்கை அவர்களை பெரிய மனிதர்களாக மாற்றிவிட்டது. ஒருவன் கடையில் சுமை தூக்கும் வேலை… மற்றொருவன் ஹோட்டலில் வேலை… இன்னொருவன் தையல் வேலை… ரசாக்கோ மரக்கறித் தோட்டத்தில் வேலை… இப்படி ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை செய்து வீட்டை தாங்கத் தொடங்கினர். அதனால் இப்போது பீபி வேலைக்கு செல்லவில்லை. வயதும் உடல் வலியும் அவளை மெதுவாக சோர்வடையச் செய்திருந்தது. பீபி வாழ்ந்தது அவர்களுக்கே சொந்தமான ஒரு சிறிய வீட்டில். இரண்டு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட அந்த வீடு… சமையல் அறை அழகாக வரிச்சு கொண்டு செய்யப்பட்ட மண்சுவர்… எளிமையான அந்த வீட்டை பீபியின் கணவனுக்கு நகரசபையால் ஒப்புதலுடன் வழங்கியிருந்தார்கள். சிறிய வீடு தான்… ஆனால் அந்த குடும்பத்தின் நினைவுகள் முழுவதும் அந்த சுவர்களுக்குள் தான் உயிரோடு இருந்தன. கணவனின் சிரிப்பு… பிள்ளைகளின் குழந்தைப் பருவம்… பசியோடு கூட சேர்ந்த சிரிப்புகள்… மழை பெய்யும் இரவுகளில் எல்லோரும் ஒன்றாக சுருண்டு படுத்த உறங்கிய தருணங்கள்… அனைத்தும் அந்த வீட்டோடு கலந்திருந்தது...

மலரின் மௌனம் (பாகம் - 4)

படம்
  யார் இந்த ரசாக்? ரசாக் இற்கு என்ன தான் நடந்தது? ஆம்… பீபியின் எட்டு பிள்ளைகளில் ஆறாவது மகன் தான் இந்த ரசாக். இவனுக்கு இரண்டு அக்காமாரும், மூன்று அண்ணன்மாரும், இரண்டு தம்பிமாரும் இருந்தார்கள். பீபிக்கு தனது எட்டாவது கடைசி மகன் பிறந்து எட்டு மாதங்களே ஆயிருந்தது. அந்த நேரத்திலேயே அவள் தனது கணவனை இழந்துவிட்டாள். “மாரடைப்பு…” அந்த ஒரு வார்த்தை, ஒரு குடும்பத்தின் நிம்மதியை முழுவதுமாக சிதறடித்துவிட்டது. அன்றிலிருந்து பீபியின் வாழ்க்கை மாறிப்போனது. ஒரு பெண்ணாக அல்ல… ஒரு தாயாக மட்டுமே அவள் வாழத் தொடங்கினாள். எட்டு பிள்ளைகளையும் வளர்த்து கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு, தனியாக அவளின் தோள்களில் விழுந்தது. காலை விடியும் முன் எழுந்து வேலைக்கு செல்வாள். என்ன வேலை தெரியுமா? அந்த காலத்தில் “கெபலை வெட்டுவது” என்பார்கள். வீடுகள் கட்டப்படும் இடங்களில் மண்வெட்டுவது… அந்த மண்ணை பெரிய கூளங்களில் நிரப்பி, தலையில் சுமந்து தொலைதூரம் கொண்டு சென்று கொட்டுவது… ஒரு பெண்ணாக அல்ல… ஒரு இரும்பு பெண்ணாகவே பீபி வாழ்ந்தாள். வெயிலும் மழையும் பாராமல் உடலை உடைத்து உழைப்பாள். அன்றைய தினம் கிடைக்கும் சிறிய சம்பளத்திலேயே அந...

மலரின் மௌனம் (பாகம்-3)

படம்
  அப்போது அவளுக்கு என்ன தான் தெரியும்? பாவம்… அவளுக்கு நான்கு வயது. அவள் தம்பி அகமதுவுக்கு இரண்டரை வயது. என்னவாம்? வீட்டில் எல்லோரும் இப்படி அலறி அழுகிறார்கள் இந்த நள்ளிரவில்… நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்தாள் பாத்திமா. வீடு முழுவதும் சலசலப்பு. பக்கத்து வீட்டார், சொந்தக்காரர்கள் என பலர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களுக்கிடையில் இரண்டு பொலிஸ்காரர்களும். அவள் தம்பி அகமது பயந்து அழுதபடி ஓடி வந்தான். “உம்மா… உம்மா…” என்று தேடினான். வாசலோரம் ஒரு மூலையில் அமர்ந்திருந்த உம்மா, தலையில் அடித்துக்கொண்டு “எங்க போனிங்க… எங்க போனிங்க…” என்று கதறி அழுதுகொண்டிருந்தாள். பாத்திமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட அக்கா நிசா மாமி, அகமதுவை தூக்கி அணைத்தபடி, “ஒன்றுமில்லை அகமது… நீ என் தோளில் படு…” என்று முதுகைத் தட்டினாள். பாத்திமா… என்ன நடக்கிறது என்று புரியாமல், பயத்தில் ஒரு ஓரமாக பதுங்கி நின்றாள். எதுவும் தெரியாமல் இருந்தாலும், அவள் கண்கள் மட்டும் கண்ணீரை சிந்தின. எல்லோரும் இருந்தார்கள்… ஆனால் வாப்பாவை மட்டும் காணவில்லை. “வாப்பா எங்கே…?” அவளது சிறிய கண்கள் கண்...

மலரின் மௌனம்

படம்
            மலரின் மௌனம்         பாகம் 3        இன்ஷா அல்லாஹ்        வெகு விரைவில்               ஒரு வீட்டின் சுவர்களில்                 மலர்ந்த நினைவுகள்...               அந்த கடிகாரத்தின் டாங்..டாங்...               என்ற ஒலி இறந்துப்போன                 நினைவுகளை உயிர்ப்பிக்கிறது...                வெளியே எடுக்கப்படும் ஒவ்வொரு பொருளும் காலங்களின் நினைவுகளை  படமாக்குகிறது....         மலரின் மௌனம் தொடரும்.         (இன்ஷா அல்லாஹ்)

மலரின் மௌனம் ( பாகம் -2)

படம்
  மீண்டும் மீண்டும் வீட்டின் உள்ளிருந்து பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டின் நினைவுகளை சுமந்தபடி வாசலை கடந்து சென்றது. அந்த நேரத்தில்… பல ஆண்டுகளாக அந்த வீட்டின் சுவரில் பெருமையாக தொங்கியிருந்த பழைமையான பெரிய கடிகாரத்தை இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட அந்த கடிகாரம், காலத்தின் சாட்சியாக இருந்தது. அதன் உள்ளே கீழே தொங்கியிருந்த வெள்ளி நிற மணி மெதுவாக ஆடிக்கொண்டே இருந்தது. ஒரு மணி அடித்தால் — “டாங்…” இரண்டு மணி அடித்தால் — “டாங்… டாங்…” பன்னிரண்டு மணி என்றால் — அந்த வீடு முழுவதும் அதிரும் அளவுக்கு “டாங்… டாங்… டாங்…” என்று ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த சத்தம்… ஒரு காலத்தில் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சில நேரங்களில் அதே சத்தம், காரணமில்லாத ஒரு பயத்தையும் அவளுள் எழுப்பி விடும். இப்போது அந்த கடிகாரத்தையும் லொரியில் ஏற்றப் போகிறார்கள். அதை பார்த்தவுடன் பாத்திமா திடீரென ஓடிப்போனாள். அந்த பெரிய கடிகாரத்தை இரு கைகளாலும் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “இதை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள்…” என்று சொல்ல முடியாமல் கதறினாள...

மலரின் மௌனம் (பாகம் -1)

படம்
  அந்த வீட்டின் முன்புறத் திட்டியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் பாத்திமா. முன்புற ரோட்டை வெறித்துப் பார்த்தபடி, ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள். அவளது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், ஒவ்வொரு நொடியும் வழிந்தோடத் தயங்கியது. பல ஆண்டுகளாக அந்த இடம்தான் அவளின் இளைப்பாறும் உலகம். மகிழ்ச்சியான நாட்களிலும்… மனதை நொறுக்கும் துயரங்களிலும்… அதே திட்டியில் அமர்ந்து, அந்த ரோட்டை பார்த்தபடி தனிமையோடு பேசிக்கொண்டிருப்பாள். அங்கு வீசிய காற்றுக்கும் கூட அவளது மனக்காயங்கள் தெரியும். ஆனால் இன்று… அந்த அமர்வு வேறுபட்டிருந்தது. இது கடைசியாக அந்த இடத்தில் அமர்ந்து அழும் நாள் போல இருந்தது. வீட்டின் உள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்து லொரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பழைய அலமாரி… அவள் சிறு வயதில் தூங்கிய கட்டில்… சுவரில் தொங்கியிருந்த கடிகாரம்… ஒவ்வொன்றும் வெளியே செல்லும் போது, நினைவுகளும் அவளது இதயத்திலிருந்து பிய்க்கப்பட்டு செல்லும் போல இருந்தது. ஒவ்வொரு பொருளையும் காணும் பொழுதும், பழைய நினைவுகள் வயிற்றைக் குடைந்து இதயத்தில் குத்தியது. சிரித்த நாட்கள்… அழுத இரவுகள்… காத்திருந்த கணங்கள்… அனை...

மலரின் மௌனம்

படம்
  மலரின் மௌனம்… கதை ஆசிரியரின் இதயத்திலிருந்து, ஒரு பெண்ணின் மௌனத்தின் பின்னால் மறைந்திருக்கும் வலி, தியாகம், காதல், ஏக்கம், போராட்டம் மற்றும் நம்பிக்கையின் பயணமே “மலரின் மௌனம்…” ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுகளோடு சித்தரிக்க வருகிறது. அவளது மௌனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சிரிப்பின் இரகசியங்களையும், கண்ணீர் துளிகளில் பதிந்திருக்கும் ரணங்களையும் உணர்ச்சிமிக்க வடிவில் வெளிப்படுத்த வருகிறது. இது சின்னதொரு சிறுகதையின் சாயலும் அல்ல… நடைபோடும் நாவலும் அல்ல… கதை கூறும் காவியமும் அல்ல… நயம் மிக்க கவிதையும் அல்ல… மாறாக, இவை அனைத்தையும் ஒன்றிணைத்து உணர்வுகளின் ஓவியமாக உருவாகும் நயமிக்க ஒரு தொடர்கதை. வாசகர்களின் இதயங்களை தொடும் கதையாக இது அமையும் என நம்புகிறேன். பல பாகங்களாக பயணிக்கவிருக்கும் இந்த உணர்வுப் பயணத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கிறேன். அன்புடன், அப்பாஸ் பஸ்மினா

மலரின் மௌனம் ( தொடர் கதை) வெகுவிரைவில்

படம்
  வெகுவிரைவில் வெளிவரவுள்ளது... மலரின் மௌனம் ( தொடர்கதை) ஆசிரியர்- அப்பாஸ் பஸ்மினா