மலரின் மௌனம்
மலரின் மௌனம்…
கதை ஆசிரியரின் இதயத்திலிருந்து,
ஒரு பெண்ணின் மௌனத்தின் பின்னால் மறைந்திருக்கும்
வலி, தியாகம், காதல், ஏக்கம், போராட்டம் மற்றும் நம்பிக்கையின் பயணமே
“மலரின் மௌனம்…”
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுகளோடு சித்தரிக்க வருகிறது.
அவளது மௌனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சிரிப்பின் இரகசியங்களையும்,
கண்ணீர் துளிகளில் பதிந்திருக்கும் ரணங்களையும்
உணர்ச்சிமிக்க வடிவில் வெளிப்படுத்த வருகிறது.
இது சின்னதொரு சிறுகதையின் சாயலும் அல்ல…
நடைபோடும் நாவலும் அல்ல…
கதை கூறும் காவியமும் அல்ல…
நயம் மிக்க கவிதையும் அல்ல…
மாறாக,
இவை அனைத்தையும் ஒன்றிணைத்து
உணர்வுகளின் ஓவியமாக உருவாகும்
நயமிக்க ஒரு தொடர்கதை.
வாசகர்களின் இதயங்களை தொடும் கதையாக
இது அமையும் என நம்புகிறேன்.
பல பாகங்களாக பயணிக்கவிருக்கும்
இந்த உணர்வுப் பயணத்தில்
நீங்களும் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்,
அப்பாஸ் பஸ்மினா

கருத்துகள்
கருத்துரையிடுக