மலரின் மௌனம் (பாகம் -1)

 

அந்த வீட்டின் முன்புறத் திட்டியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் பாத்திமா.

முன்புற ரோட்டை வெறித்துப் பார்த்தபடி, ஏதோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தாள்.

அவளது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், ஒவ்வொரு நொடியும் வழிந்தோடத் தயங்கியது.


பல ஆண்டுகளாக அந்த இடம்தான் அவளின் இளைப்பாறும் உலகம்.

மகிழ்ச்சியான நாட்களிலும்…

மனதை நொறுக்கும் துயரங்களிலும்…

அதே திட்டியில் அமர்ந்து, அந்த ரோட்டை பார்த்தபடி தனிமையோடு பேசிக்கொண்டிருப்பாள்.

அங்கு வீசிய காற்றுக்கும் கூட அவளது மனக்காயங்கள் தெரியும்.


ஆனால் இன்று…

அந்த அமர்வு வேறுபட்டிருந்தது.

இது கடைசியாக அந்த இடத்தில் அமர்ந்து அழும் நாள் போல இருந்தது.


வீட்டின் உள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்து லொரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

பழைய அலமாரி…

அவள் சிறு வயதில் தூங்கிய கட்டில்…

சுவரில் தொங்கியிருந்த கடிகாரம்…

ஒவ்வொன்றும் வெளியே செல்லும் போது, நினைவுகளும் அவளது இதயத்திலிருந்து பிய்க்கப்பட்டு செல்லும் போல இருந்தது.


ஒவ்வொரு பொருளையும் காணும் பொழுதும்,

பழைய நினைவுகள் வயிற்றைக் குடைந்து இதயத்தில் குத்தியது.

சிரித்த நாட்கள்…

அழுத இரவுகள்…

காத்திருந்த கணங்கள்…

அனைத்தும் ஒன்றாக வந்து அவளது மனதை நெரித்தன.


அவள் அமைதியாக இருந்தாள்.

ஆனால் அவளது கண்ணீர் மட்டும்,

அந்த வீட்டை விட்டு பிரிய மனமில்லை என்று கதறிக் கொண்டிருந்தது…

                   மலரின் மௌனம் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்