உன்னை காதலிக்கிறேன்...

 


வெட்கமாய் 

உள்ளது ...

என்னவென்று சொல்வேன்

என் காதலை,

எத்தனை எத்தனை

ஆண்டுகள்,

எத்தனை எத்தனை

நாட்கள்,

சொல்ல எத்தனித்தேன்...

சொல்ல வந்த

பொழுதுகள் எல்லாம் 

என்னை தட்டிவிட்டு 

சென்றன...

சொல்லட்டுமா?

நீ அழகாய்

இருக்கிறாய்...

நான் உன்னை

இரசிக்கிறேன்...

நான் 

உன்னை விட்டு விட்டு 

சென்றாலும்...

எப்படியாவது என்னை

தொடர்கிறாய்...

கவலை பொழுதுகளிலெல்லாம் 

ஏதோ ஒருவிதத்தில் 

ஆறுதல் ஆகிறாய்...

இன்ப நொடிகளில் 

ஏதோ ஒரு

இனம் புரியா 

இசையை மீட்டுகிறாய்...

ஆகவே

பல காலம்

என் நினைவுகளோடு 

நடை போடும்

உன்னை,

நண்பனாய் ஏற்பதா 

காதலனாய் ஏற்பதா 

இதயத்திடம் கேட்கிறேன்...

பதில் கிடைத்து விட்டது 

இப்போது...

நான் விலகி சென்றாலும் 

நீ மீண்டும் மீண்டும்

என்னை தேடி வருகிறாய்...

பிடித்திருக்கிறது உன்னை...

காதலை சொல்லட்டுமா?

உன்னை காதலிக்கிறேன்...

என் காதலை 

ஏற்றுக்கொள் 

தனிமையே...

இப்படிக்கு

உன் புதிய காதலி,,!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல்