குழந்தை

 


குழந்தை

என்ற வெள்ளைக்கடதாசி 

என் கையில்...

குழந்தை 

என்ற ஓவியம் 

வரையட்டுமாம் எனக்கு...

அன்பு என்ற 

பென்சில் கூரால் 

கோடுகள் வரைகிறேன்...

மழலை மொழி,

குறும்புத்தனம்,

பிடிவாதம் ,

சின்னச்சின்னக் கோபம், 

அன்புச்சண்டைகள் 

போன்ற வர்ணங்களை 

தீட்டி முடிக்கிறேன். 

இதோ ஓர்

அழகான குழந்தை 

ஓவியம் தயார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்