எளிமை

 https://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1mhttps://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1m

எளிமை 

மிக அழகானது...

வாழ்க்கையை 

எளிமையாக 

இரசித்து வாழ

கற்றுக்கொள்ளுங்கள்...

இருப்பதை வைத்து 

இயற்கைக்கு 

நன்றி சொல்லுங்கள்...

ஆடம்பர வாழ்வை

தேடி 

கொட்டிக்கிடக்கும் 

சிறு சிறு

இன்பங்களை 

இழந்து விடாதீர்...

பல பிரச்சனைகள் 

நாம் ஆடம்பரத்தால் 

வருவன...

பல நிம்மதிகள் 

நாம் இருப்பதை 

வைத்து 

பறப்பதற்கு ஆசைபடாமல் 

இருப்பதால் 

வருவன என்பதை 

கற்றுக்கொண்டாலே...

வாழ்க்கை இன்ப 

வரமாகும்...

மாட மாளிகையிலும் 

கோடகோபுரத்திலும் 

இல்லாத இன்பம் 

மண்வீட்டில் அன்போடு 

வாழ்வதில் கிடைக்கும்...

லக்சரி ஆட்டல்களில் 

கிடைக்காத இன்பம் 

அன்பானவருடன் 

அன்பை பரிமாரி 

ஒருபொழுதேனும் ஒன்றாய் 

உண்ணுவதில் கிடைக்கும்...

பல இலட்சங்களை 

செலவளித்து செல்லும் 

சுற்றுலாக்களில் கிடைக்காத 

இன்பம் 

அன்பு உறவுகளை 

தேடிசெல்வதில் கிடைக்கும்...

இப்படி வாழ்ந்து 

பாருங்கள் 

வாழ்க்கை உங்களை 

வாழ வைக்கும்...

இல்லையேல் 

ஆடம்பர வாழ்க்கை

 எப்போதேனும்

உங்களை 

அழ வைக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்