பொங்கலோ பொங்கல்
காலையிலே போட்ட
கோலமும்,
சோலையிலே பூத்த
மலர்களும்,
மாலையிலே சேர்ந்த
மல்லிகையும் வாழ்த்துதே
பொங்கலோ பொங்கல்//
பானையிலே காய்ச்சும்
பாலும் கதிரவனை
பார்த்து பொங்குதே
பொங்கலோ பொங்கல்//
வாழை இலையிலே
வந்து சேர்ந்த
வாழைப்பழமும் பலகாரமும்
கரும்பும் என
கடவுளுக்கு படைத்த
பொங்கலிலே சுவை
பொங்குதே
பொங்கலோ பொங்கல்//
கட்டிய வேட்டியை
கட்டியே மடித்து
வீரநடை போடும்
அப்பாவோடும் ,
கட்டிய பட்டுச் சேலையுடன்
கலையாய் நடைபோடும்
அம்மாவோடும்,
புத்தாடையோடு நானும்
குலசாமி கோயிலுக்கு
குடும்பத்தோடுசெல்லுகையில்
வீதியெல்லாம்
பொங்கலோ பொங்கல்//
சொந்தங்கள் கூடி
நகைச்சுவை பாடி
ஒன்றாய் சமைத்த
வாழையிலை சாப்பாடு
வாசல் வரை மணக்குதே
பொங்கலோ பொங்கல்//
பக்கத்து வீட்டு
பசங்கலோடு சேர்ந்து
பட்டாசு கொலுத்துகையில்
பொங்கலோ பொங்கல்//
கதிரவனுக்கு நன்றி
சொல்லி
கண்குளிர பசுவுக்கும்
பொட்டு வெச்சி
பட்டிக்கு முன்னே
ஒன்னா நின்னு எல்லோரம்
ஒரு செல்பி எடுக்கையிலே
பொங்கலோ பொங்கல்//
கருத்துகள்
கருத்துரையிடுக