கனவு தேவதை

அவள்
கற்பனையின் காவியம்
கனவின் ஓவியம்...

அவளின்
மௌனம்
மல்லிகையின் மணமாய்
வீசும்...

அவளின்
குரல் குயிலின்
கானமாய்
பேசும்..

அவளின்
நிறம்
மாலைநேர
மஞ்சள் வெயிலின்
பொன்னாய்
மாறும்...

அவளின்
கூந்தல்
காரிருளின் கருமையைச்
சேறும்...

அவளின்
சிரிப்பு
சித்திரமாய்
சித்தரிக்கும்...

அவளின்
பார்வையில்
விண்மீன்கள்
விளையாடும்...

அவளின்
மென்னையில்
பெண்மையே சிலையாகும்...
           அப்புத்தளை அப்பாஸ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்