தூரதரிசனம்


அன்று பசித்ததும்
பிசைந்த சோற்றை
பிடிபிடித்து அம்மா
'காக்கைக்கு ஒரு பிடி,
உனக்கு ஒரு பிடி' என
ஊட்டிய நினைவுகளும்...

தூக்கத்தின் போது
துயிலும் கட்டிலாய்
தாயின் மடியிருந்த,
என்னை கவர்ந்த கானமாய்
தாலாட்டுப் பாட்டிருந்த
அந்த நாட்களும்...

நடை பயில்கையில்
கால் வலிக்க
தந்தையின் தோளில்
உப்பு மூட்டை போனதும்,

பள்ளி செல்ல 
களவில் கட்டிலுக்கடியில்
ஒளிந்ததால்,நான்
காணாமல் போனதாய் எண்ணி
கண்ணீர் விட்டழுத 
தாயின் முகமும்,

கிழிந்த சேலையும்,
ஓட்டை விழுந்த பையையும்,
தேய்ந்த செருப்பையும்,
அணிந்துக்கொண்டு,
'நான் தான் டீச்சர்'என
கையில் தடியுடன்
கதிரையையும்,மேசையையும்
அடித்து கற்பித்த நினைவுகளும்,

அன்று
பக்கத்து வீட்டுப்பயல்களுடன்
கூட்டணி சேர்ந்து
கூட்டாஞ் சோறு சமைத்து
விளையாட்டு வீட்டில்
விருந்து படைத்ததும்,

செத்துப்போன 
வண்ணத்துப்பூச்சியை
'சவம் 'என்றே புதைத்து,
அதன் மேல் 
பூக்கள் தூவி 
கண்ணீர் விட்டதுவும்,

இன்று 
என் வாழ்வில்
தூரதரிசனமாய்....

அன்றைய வாழ்வில்
சுகமான நினைவுகள்
சுவையாக பதித்த
வடுக்களோ....
இன்றைய
சுமைகளும்,சோகங்களும்
நிறைந்த வாழ்வில்
தூரதரிசனமாய் தொலைவில்...
                                அப்புத்தளை அப்பாஸ்
        நன்றி
        தின





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்