இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
பனி வானத்தோடு மோகம் கொண்ட மேகம் முகடுகளுக்கு பஞ்சு மழை பொழிகிறது...

வாக்கு

தேர்தலுக்கு வாக்களிக்க போன பொண்ணு, தெரிவானா வாக்கு நல்ல கண்ணு என வாக்கப்பட்டு வந்து நின்னா சீமன் வீட்டு பையனுக்கு... கடைசியில வாக்களிக் போன பொண்ணு வாக்கப்பட்டு வந்து நின்னா...

ஏமாற்றம்

படம்
எழுதிமுடித்த அனுபவக் கவிதைகளை காகிதக் கப்பல் எடுத்துச் சென்றது, எழுதவிருக்கும் எதிர்பார்ப்புக் கவிதைகளை மை இன்றி பேனா முனை எழுத மறுக்கிறது... எதை எப்படிச் சொல்வது? எல்லாமே ஏமாற்றமாய்ச் செல்கிறது.

யாவும் கற்பனை

படம்
கடல் மீது நடந்து வானை  எட்டிப்பிடிக்கிறேன். மைதான வானில் விளையாடி பரிதி பந்தை அடிக்கிறேன். மலர் மீது கண் மலர்ந்து தேனருந்தி தேனீக்களுடன் கதை பேசுகிறேன். நிலா மீது அமர்ந்து நட்சத்தரங்களின் தூசு தட்டுகிறேன். வானவில் குடை பிடித்து முத்து மழைத்தளிகளால் மாலை கட்டுகிறேன். நீர் வீழ்ச்சியில் சருக்கு மரமேறி மலைகளுடன் தலையணை சமர் செய்கிறேன். நதி வழி பயணிக்கிறேன் நந்தவன அழகு மாளிகையைத் தேடி. நிரந்தரமற்ற உலகில் அருத்தமின்றி பொருத்தமின்றி உலகோர் உருவாக்கிய  ஊமை வலிகளுக்கு கற்பனைகள் கசாயமாகின்றன.         அப்புத்தளை அப்பாஸ்

அம்மா....அப்பா....

அன்பின் ஒத்தசொல் கொண்டு எழுதினேன்-அதன் அர்த்தம் அம்மா ஆனது, அனுபவத்தின் ஒத்தசொல் கொண்டு எழுதினேன்-அதன் அர்த்தம் அப்பா ஆனது...            அப்புத்தளை அப்பாஸ்

கனவு தேவதை

அவள் கற்பனையின் காவியம் கனவின் ஓவியம்... அவளின் மௌனம் மல்லிகையின் மணமாய் வீசும்... அவளின் குரல் குயிலின் கானமாய் பேசும்.. அவளின் நிறம் மாலைநேர மஞ்சள் வெயிலின் பொன்னாய் மாறும்... அவளின் கூந்தல் காரிருளின் கருமையைச் சேறும்... அவளின் சிரிப்பு சித்திரமாய் சித்தரிக்கும்... அவளின் பார்வையில் விண்மீன்கள் விளையாடும்... அவளின் மென்னையில் பெண்மையே சிலையாகும்...            அப்புத்தளை அப்பாஸ்

கவிதை வரிகள்..

என் கவிதை வரிகள் உளியால் செதுக்கப்பட வில்லை கல்லறையில் பதிவாவதற்கு... வலியால் வரையப்படுகின்றமையால் இதயங்களில் மட்டுமே  பதிவாகின்றன...

அமைதியின் வடிவங்கள்...

படம்
எட்டி எட்டி சென்றாலும் தொட்டு விட முடியா வானம் அமைதியின் வடிவம், கண்களால் கணித்து எண்களால் சொல்லி விட முடியா கடல் அமைதியின் வடிவம், உயர்ந்து ஊமையாய் வளர்ந்து நிற்கும் மலை அமைதியின் வடிவம், மெல்ல வருடி செல்லமாய் தொட்டுச்செல்லும் தென்றல் அமைதியின் வடிவம், கிளைபரப்பி விளைநிலம் தளைக்க வளைந்து நெளிந்துச்செல்லும் நதி அமைதியின் வடிவம், ஆடிப்பாடி ஆசைதீர பாசங்கு செய்து படம் காட்டும் உலகில் அடக்கமுடையார் அமைதியின் வடிவம்,      .................... ஆயின், அமைதியின் வடிவங்கள் சீற்றம் கொண்டால், வானம் மனம் வெடித்து இடிமழையாய் மாறும்... கடல் கடுப்பெடுத்து சுனாமியாய் சீறும்... மலை மதம் கொண்ட எரிமலையாய் ஏறும்... தென்றல் வெறிகொண்ட சூறாவளியாய் சேறும்... நதி அமைதியிழந்து வெள்ளமாய் ஊறும்... அடக்முடையான் ஆவேசப்பட்டால் அவன் சரித்திர சாதனை வீரனாகிறான்...           அப்புத்தளை அப்பாஸ்

பிரசவ வலி

நல்ல படி குழந்தையை பெற்றெடுக்கத் துடிக்கும் தாய்க்கு மட்டுமல், நல்ல படைப்பை உலகுக்கு வழங்க தவிக்கும் எழுத்தாளனுக்கும் தான்...                 அப்புத்தளை அப்பாஸ்

நவீன ஆசான்

எத்தனையோ பேரை ஏற்றிவிட்டேன். எட்டிப்பார்க்கிறேன் ஏன் நான் மட்டும் கீழே என, முடிவெடுத்து விட்டேன்... இனி நானும் முன் ஏறிக்கொண்டு பிறரையும் ஏற்றுவதென்று...

பெண்மையின் ஆசை...

பெண்குழந்தை பிறந்ததும் பொன்னாய் போற்றும் சமுகம் பெண்மையின் ஆசை... என் தேவதை என்ற தந்தையின் தாலாட்டு பெண்மையின் ஆசை... கல்வியில் கண்ணி கண் திறப்பதும் பெண்மையின் ஆசை... இருச்சுடராய் மாறி சூரியனாய் குடும்ப வாழ்விலும், சந்திரனாய் தொழில் வாழ்விலும் ஒளி வீசுவதும் பெண்மையின் ஆசை... முதல் காதலை வெட்கித் தலை குனிந்து ஏற்று வெட்கத்துள் மறைப்பதும் பெண்மையின் ஆசை... கல்யாண உலகுள் கனவுகளோடு நுழைவதும் பெண்மையின் ஆசை... மாமியார் மறுதாயாய் மாறி வரும் வரமும் பெண்மையின் ஆசை... தவமிருந்து தாய்மை அடைவதும் பெண்மையின் ஆசை... நதியாய் நாலுபேர்க்கு நல்லது செய்து தொல்லைகளை சகித்து வாழ்வதும் பெண்மையின் ஆசை... ஆன்மீகத்தில் உயர்ந்து ஆண்டவனை அடைய ஆசையோடு மண்ணறை செல்வதும் பெண்மையின் ஆசை...

சுகப்பிரசவம்

படம்
வானம்  பிரசவவலியால் துடிப்பதை கண்டு, சேவல்கள் கூவி அழுகின்றன... இயற்கை வைத்தியனாகி பிரசவம் பார்க்கிறான்... இதுவும் சுகப்பிரசவம் தான்... குழந்தை பிறந்துவிட்டது. ஆகா... எத்தனை அழகு குழந்தையில் சூரியன்.

தூரதரிசனம்

படம்
அன்று பசித்ததும் பிசைந்த சோற்றை பிடிபிடித்து அம்மா 'காக்கைக்கு ஒரு பிடி, உனக்கு ஒரு பிடி' என ஊட்டிய நினைவுகளும்... தூக்கத்தின் போது துயிலும் கட்டிலாய் தாயின் மடியிருந்த, என்னை கவர்ந்த கானமாய் தாலாட்டுப் பாட்டிருந்த அந்த நாட்களும்... நடை பயில்கையில் கால் வலிக்க தந்தையின் தோளில் உப்பு மூட்டை போனதும், பள்ளி செல்ல  களவில் கட்டிலுக்கடியில் ஒளிந்ததால்,நான் காணாமல் போனதாய் எண்ணி கண்ணீர் விட்டழுத  தாயின் முகமும், கிழிந்த சேலையும், ஓட்டை விழுந்த பையையும், தேய்ந்த செருப்பையும், அணிந்துக்கொண்டு, 'நான் தான் டீச்சர்'என கையில் தடியுடன் கதிரையையும்,மேசையையும் அடித்து கற்பித்த நினைவுகளும், அன்று பக்கத்து வீட்டுப்பயல்களுடன் கூட்டணி சேர்ந்து கூட்டாஞ் சோறு சமைத்து விளையாட்டு வீட்டில் விருந்து படைத்ததும், செத்துப்போன  வண்ணத்துப்பூச்சியை 'சவம் 'என்றே புதைத்து, அதன் மேல்  பூக்கள் தூவி  கண்ணீர் விட்டதுவும், இன்று  என் வாழ்வில் தூரதரிசனமாய்.... அன்றைய வாழ்வில் சுகமான நி...

உறவு

முன்னரெல்லாம் உயிருள்ளவரை தேடி வரும் உறவுகள்... இப்போதோ பணமிருந்தால் தான் பாசத்தோடு ஓடி வருகிறது...

ஸ்டேடஸ்...

முன்பெல்லாம் கடிதம் வர வேண்டும் உன் நலம் அறிய... இப்போதெல்லாம் கணத்துக்கு கணம் உன் நலனை தெறியப்படுத்துகிறாய்... உன் ஸ்டேடசில்.

கூட்டுமுயற்சி

எறும்புக்களின் கூட்டுமுயற்சி பஞ்சகாலத்திலும் அவைகளின் பசிதீர்க்கும்.... தேனீக்களின் கூட்டுமுயற்சி மனிதனுக்கும் மருந்தாய் பிணிதீர்க்கும்.... கறையான்களின் கூட்டுமுயற்சி புற்றுக்களும் அவைகட்கு மாளிகையாகி மணஞ்சேர்க்கும்.... மனிதா நீ மட்டும் மறந்ததேன்? கூட்டுமுயற்சியே உனக்கு உயர்ச்சி என்பதை.

வானவில்

படம்
கொள்ளை அழகே வெள்ளை நிலவே... சோலை மலர்களின் சாயம் கொண்டு உனக்காய் சேலை செய்தேன்... காதல் பரிசாய் மோதல் மேகங்களிடம் அனுப்பி வைத்தேன்.. . நீ சீற்றங் கொண்டு வீசியெறிந்தாய்... மடிப்பவிழ்ந்த சேலை வானில் வானவில்லாய் ஆனது...

கணவனே உனக்கோர் காதல் பா...

நம் பார்வைகளின் புணர்ச்சி காதலானது, இடியுடன் கூடிய காதல் மழையில் இதயம் நனைந்தது, கண்ணீர் ,கவலையின்றி காதலர்கள் இணைந்ததுண்டோ? இதயங்களை பிரிக்க போட்ட முள்வேளியில் தோத்தனர் மூத்தோர்.. மகர் கொடுத்து,முடிபிடித்து கரம் பிடத்தான் காதலன் கணவனாய். காதலும்,காமமும் இணைந்தது... தொல்லைகளால் துவண்டு போகும் போதெல்லாம் தோழனாய் தோள்கொடுப்பாய், காதலிப்பதில் எப்போதும் முதலிடம் நீ... கடுகடுவென சண்டைப்படிப்பதில் முதலிடம் நான்... கணவனே உனக்கோர் காதல் பா... ஓரறையில் ஒன்றாய் வாழும் நாம் மண்ணறை சுவனத்திலும் காதலர்களாய் உலா வர இறைவா அருள் தா...

மனநிலை

அடிக்கடி மாறுவது காலநிலை மட்டுமல்ல... டொடிக்கு நொடி மாறுவது மனித மனநிலையும் தான்...