- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இடுகைகள்
பொங்கலோ பொங்கல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காலையிலே போட்ட கோலமும், சோலையிலே பூத்த மலர்களும், மாலையிலே சேர்ந்த மல்லிகையும் வாழ்த்துதே பொங்கலோ பொங்கல்// பானையிலே காய்ச்சும் பாலும் கதிரவனை பார்த்து பொங்குதே பொங்கலோ பொங்கல்// வாழை இலையிலே வந்து சேர்ந்த வாழைப்பழமும் பலகாரமும் கரும்பும் என கடவுளுக்கு படைத்த பொங்கலிலே சுவை பொங்குதே பொங்கலோ பொங்கல்// கட்டிய வேட்டியை கட்டியே மடித்து வீரநடை போடும் அப்பாவோடும் , கட்டிய பட்டுச் சேலையுடன் கலையாய் நடைபோடும் அம்மாவோடும், புத்தாடையோடு நானும் குலசாமி கோயிலுக்கு குடும்பத்தோடுசெல்லுகையில் வீதியெல்லாம் பொங்கலோ பொங்கல்// சொந்தங்கள் கூடி நகைச்சுவை பாடி ஒன்றாய் சமைத்த வாழையிலை சாப்பாடு வாசல் வரை மணக்குதே பொங்கலோ பொங்கல்// பக்கத்து வீட்டு பசங்கலோடு சேர்ந்து பட்டாசு கொலுத்துகையில் பொங்கலோ பொங்கல்// கதிரவனுக்கு நன்றி சொல்லி கண்குளிர பசுவுக்கும் பொட்டு வெச்சி பட்டிக்கு முன்னே ஒன்னா நின்னு எல்லோரம் ஒரு செல்பி எடுக்கையிலே பொங்கலோ பொங்கல்//
நன்றிகள் அமெரிக்கா முத்தமிழ் இலக்கிய பேரவைக்கு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2026
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புதிய ஆண்டு புலர்ந்தது// புதுமை என்று மலர்ந்தது// வருடம் ஒன்று சென்றதால்// புது வருடம் என்று வந்தது// உள்ளம் எல்லாம் கருணை துளிர்க்கட்டும்// உயிர்கள் மீது மனிதநேயம் செழிக்கட்டும்// ஒற்றுமையில் மனிதம் ஓரினமாய் மாறட்டும்// இயந்திர வாழ்க்கை முறை குறையட்டும்// இயற்கையோடு இணைந்து இன்பம் நிறையட்டும்// கணினி அறைக்குள் கழியும் கணப்பொழுதுகள் கழியட்டும்// களிப்புடன் சூழலை நேசித்து திரியட்டும்// முதியோர் இல்லங்கள் மறையட்டும்// மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் ஆகட்டும்// உயிர்கொல்லும் உடனடி உணவுகள் தொலையட்டும்// வீட்டு உணவே மருந்து ஆகட்டும்// மாடிவீட்டு மந்திரியும், குடிசை வீட்டு மாமாவும் மண்ணில் விதைகள் விதைக்கட்டும்// அனைவர் மனதிலும் அன்புடன் மனிதநேயம் அழகிய விருட்சமாய் வளரட்டும்//
இலங்கையர் நாம் மீண்டெழுவோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்து சமுத்திர முத்தே இலங்கை எங்கள் சொத்தே// சிறு தீவை இங்கு சிதறடித்த பெருங்காற்றே நீ // தாண்டவம் ஆட மாண்டனர் சிலர் மீண்டனர் பலர்// தொடர் மழை பொழிய இடர் எம்மை சூழ// தொடர் மலைகள் சரிய தொடர்ந்து உயிர்கள் மண்ணில் மறைய// உறவுகள் அதிர்ச்சியில் உறைய சேதமான உடைமைகள் தேசத்தின் கோலம் ஆயின// வான் கதவுகள் திறந்தன வானுலகம் பறந்தன உயிர்கள் பல// மலைசரிவால் மண்ணுக்குள் மாண்டனர்// வெள்ளத்தால் உள்ளுக்குள் மூழ்கினர்// இறுக்கிப் பிடித்த பென்சிலுடன் இறந்த சிறுவனும்// கணவன் வருகைக்காய் இன்னும் கண்ணீருடன் காத்திருக்கும் பெண்ணும்// மண்ணுக்குள் மர்மமாய் மறைந்த கிராமமும் // என இதயத்தை உடைக்கும் எத்தனை கண்ணீர் கதைகள்// பணக்காரன் ,ஏழை பகிர்ந்துண்டனர் ஓர் தட்டில்// உயிர் காத்து உடைமைகள் விட்டு ஓட உறவுகளின் உன்னதத்தை உணர்த்தியது டிட்வா// நிலையில்லா உலகில் நீயும் நானும் ஒன்றென உணர்த்தியது டிட்வா// சொத்துகள் செத்துப்போகும் புண்ணியங்கள் தொடர்ந்து வரும் உணர்த்தியது டிட்வா// கற்றது பாடம் பெற்றது படிப்பினை என நகர்வோம்// உடைந்தது போதும் தடையென கவலையை தகர்த்தெறிவோம்// இழந்தவை என்றும் இர...
HAJIUMMA HAIR OIL
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Dear HAJIUMMA, LOVE ❤️ YOU உங்கள் என்றும் எங்களுடன். என் முதல் முயற்சி HAJIUMMA HAIR OIL நீங்கள் சொல்லித்தந்த உங்கள் கைப்பக்குவ HAIR OIL இன்றைக்கு ஒரு BUSINESS ஆக மாத்திடேன். துவா செய்ங்க இந்த BUSINESS REACH ஆவ.இந்த BUSINESS INSHAALLAH திரும்பவும் எகட HAJIUMMA கூட்டுக்குடும்பத்த ஒன்றிணைக்கும். INSHAALLAH... HAJIUMMA HOME நா INSHAALLAH மீட்டு எடுப்பேன். அருள்புரி ALLAH.... அந்த எடத்துல H.A ONLINE HOME MADE HAJIUMMA HAIR OIL BOARD வரும்... INSHAALLAH.... Love you 😍 HAJIUMMA ஒங்கட தைரியம் எனக்கும் இரிக்கி.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
https://youtube.com/shorts/8pBcp4Cct-w?si=o-7HRAheZvCSSerr One day inshaallah Dear hajiumma,நான் எதையெல்லாம் விரும்புவேனோ அதை பெற்றுக்கொள்ள பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.இருப்பினும் அல்லாஹ்விடம் நான் செய்யு துவா என்னை ஒருபோதும் கை விட்டதில்லை.என்னுடைய காதல் என் சொந்தவீட்டுப்பயணம் என பல நீண்டநாள் போராட்டங்களின் பின்னும் தொடர்ச்சியான துவாவாலும் என் அல்லாஹ் எனக்கு தந்தவையே இன்று இழந்திருக்கும் இந்த கூட்டுக்குடும்ப மாளிகையை inshaallah என் ரப்பு என் தாயை விட பலமடங்கு என் மீது அன்புள்ள ரப்பு நிச்சயம் என் கைக்கு தருவான்.இன்றிலிருந்து நான் போராடுவேன்... Dear hajiumma உங்கள் வீட்டை நீங்கள் இறக்கும் தருணம் கூட்டுக்குடும்பம் சிதறமல் காக்க என் தம்பியின் பெயரில் எழுதி சென்றீர் but unfortunately அவனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. But inshaallah நா அந்த வாக்க காப்பாத்துவே.யார் கைக்கு வீடு இன்று சென்றிருந்தாலும் என் துவா மூலம் அல்லாஹ்விடம் போராடி விடாமுயற்சி செய்து பெற்றுக் கொடுப்பேன். மீண்டும் என் குருவிகூட்டை அலங்கரிப்பேன்... And எப்போதும் என் கண்ணீரிலும் க...