மலரின் மௌனம் ( பாகம் -2)
மீண்டும் மீண்டும் வீட்டின் உள்ளிருந்து பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டின் நினைவுகளை சுமந்தபடி வாசலை கடந்து சென்றது. அந்த நேரத்தில்… பல ஆண்டுகளாக அந்த வீட்டின் சுவரில் பெருமையாக தொங்கியிருந்த பழைமையான பெரிய கடிகாரத்தை இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட அந்த கடிகாரம், காலத்தின் சாட்சியாக இருந்தது. அதன் உள்ளே கீழே தொங்கியிருந்த வெள்ளி நிற மணி மெதுவாக ஆடிக்கொண்டே இருந்தது. ஒரு மணி அடித்தால் — “டாங்…” இரண்டு மணி அடித்தால் — “டாங்… டாங்…” பன்னிரண்டு மணி என்றால் — அந்த வீடு முழுவதும் அதிரும் அளவுக்கு “டாங்… டாங்… டாங்…” என்று ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த சத்தம்… ஒரு காலத்தில் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சில நேரங்களில் அதே சத்தம், காரணமில்லாத ஒரு பயத்தையும் அவளுள் எழுப்பி விடும். இப்போது அந்த கடிகாரத்தையும் லொரியில் ஏற்றப் போகிறார்கள். அதை பார்த்தவுடன் பாத்திமா திடீரென ஓடிப்போனாள். அந்த பெரிய கடிகாரத்தை இரு கைகளாலும் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “இதை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள்…” என்று சொல்ல முடியாமல் கதறினாள...