https://youtube.com/shorts/-03XRr09lwg?si=lO93HXliG6DV0DEQ
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
உன்னை காதலிக்கிறேன்...
வெட்கமாய் உள்ளது ... என்னவென்று சொல்வேன் என் காதலை, எத்தனை எத்தனை ஆண்டுகள், எத்தனை எத்தனை நாட்கள், சொல்ல எத்தனித்தேன்... சொல்ல வந்த பொழுதுகள் எல்லாம் என்னை தட்டிவிட்டு சென்றன... சொல்லட்டுமா? நீ அழகாய் இருக்கிறாய்... நான் உன்னை இரசிக்கிறேன்... நான் உன்னை விட்டு விட்டு சென்றாலும்... எப்படியாவது என்னை தொடர்கிறாய்... கவலை பொழுதுகளிலெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் ஆறுதல் ஆகிறாய்... இன்ப நொடிகளில் ஏதோ ஒரு இனம் புரியா இசையை மீட்டுகிறாய்... ஆகவே பல காலம் என் நினைவுகளோடு நடை போடும் உன்னை, நண்பனாய் ஏற்பதா காதலனாய் ஏற்பதா இதயத்திடம் கேட்கிறேன்... பதில் கிடைத்து விட்டது இப்போது... நான் விலகி சென்றாலும் நீ மீண்டும் மீண்டும் என்னை தேடி வருகிறாய்... பிடித்திருக்கிறது உன்னை... காதலை சொல்லட்டுமா? உன்னை காதலிக்கிறேன்... என் காதலை ஏற்றுக்கொள் தனிமையே... இப்படிக்கு உன் புதிய காதலி,,!
காதல்
காதல் அழகானது காதல் அர்த்தமுள்ளது முதல்,இடை,கடை காதல் என கதை பேச உண்மை காதல் அறியாது... ஒருவர் மீது ஒருமுறை வருவதே காதல்... நம் காவியங்கள் சொல்லும் காதல் கதைகள் கூட அழகானவை, அர்த்தமுள்ளவை, கண்ணகிக்கோ கோவலன் மீது இருந்தது உண்மை காதல்... ஆனால் கோவலனுக்கோ மாதவி மீது ? அது காதலா? சீதைக்கு இராமன் மீது இருந்தது உண்மைக்காதல்... ஆனால் மாற்றான் மனைவியை சிறைபிடித்த இராவணுக்கு சீதை மீது? அது காதலா? பிற பெண்ணை நாடிச்சென்ற இராவணன் இறந்த போதே உடன் கட்டை ஏறிய மண்டோதரிக்கு இருந்தது உண்மை காதல்... மும்தாஜ் சாஜஹான் காதலை தாஜ்மஹால் சொல்லும்... சலீம் அனார்கலி காதலை கல்லறை சொல்லும்... காதல் அழகானது, காதல் அர்த்தமுள்ளது, நம் காப்பியங்கள் கற்பிக்கின்றன... ஒருவர் மீது ஒருமுறை பிறப்பதே உண்மைக் காதல்... உணர்வுகளின் ஆணிவேர், உயிருள்ள வரை உள்ள இதயத்துடிப்பு...


கருத்துகள்
கருத்துரையிடுக