தனிமை

 தனிமை

என் நெருங்கிய 

தோழி...

 மனதின் 

ஆழத்தை விசாரித்து

மன அமைதியை 

அமைத்திடும் அதிசயம்...

கவலைகள் 

அலைபாயும் போது

நிலைகுலைந்த நிம்மதியை 

நிதானமாய் ஏற்படுத்தும் 

ஓர் வித்தை...


எத்தனை பேர்

எம்மை சுற்றி

நின்றாலும்...

ஆறுதலாய் 

ஆயிரம் 

வார்த்தைகள் வந்தாலும்...

அத்தனையும் அசந்துபோகும்

அபூர்வம்...

கவலைகளை 

கண்டெடுக்கும் தனிமை...

கண்ணீரை 

துடைத்தெறியும் தனிமை...

இன்பத்தில் 

இசை மீட்டும் தனிமை...

காதலனுடன் 

கதை பேசும் தனிமை...

உன் திறமையை 

உனக்குள் விதைக்கும் தனிமை...

இனியென்ன 

தனிமை என்

உயிர் தோழி...

நான்

தனிமையின் ராணி...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்