ஆசானே...

 ஏணியாய் 

எம்மை ஏற்றிவிடும்...

தோணியாய் 

கல்வி கரையை காட்டிவிடும்...

தீயாக தீபங்களே...

எம் ஆசான்களே...

கற்க வரும்

பிள்ளைகளும் 

பெற்றெடுத்த 

பிள்ளைப்போல்...

உறவாடி 

கல்வியிலாளராய் 

உருவாக...

விந்தை செய்யும் 

வியப்பான மாந்தரே 

எம் ஆசான்களே...

உம்மை வாழ்த்துகிறேன்...

போற்றுகிறோம்...

நீடூழி காலம்

வாழ்கவென 

வாழ்த்துப்பா பாடுகிறோம் 

அன்பு ஆசான்களே....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்