நன்றி கெட்ட மனிதா
நன்றி கெட்ட
மனிதர் வாழும்
உலகம் இது...
நீ எவ்வளவு
தான் செய்தாலும்
என்னதான் செய்தாய்
என்று கேட்கும்
உடைந்து போகாமல்
பதில் சொல்ல
கற்றுக்கொள்...
பொய் முகங்களுள்
உள்ள...
போலிச்சிரிப்புக்களுள்
எத்தனை முறை
தான் ஏமாறுவது...
விழித்துக்கொள்...
நன்றி கெட்ட
மனிதர்களுடன் நடை
போடுகையில்
கால்களும் பின்னுகின்றன...
என்னே இந்த
மனிதர் என...
வீதியில் ஒருபிடி
சோறிட்ட சொறிநாய் கூட
நன்றி உணர்வோடு
கண்ட இடத்தில்
வாலையாவது ஆட்டும்...
ஒரு போதும்
மனிதனை
சீ நாயே என
திட்டி விடாதீர்
ஏனெனில் நன்றி
உணர்வில் நாய்
மனிதனை விட மேலானது...
கருத்துகள்
கருத்துரையிடுக