யதார்த்தம்
நல்லவர்க்கு
காலமில்லை நாளும்...
பொய்பேசுவோர்
போற்றப்படும் போது
உண்மை பேசுவதால்
ஊமை அடி எனக்கே...
நாளுபேர்க்கு மத்தியில்
ஞாயத்தையே பேசி
என் முதுகில்
தீக்காயங்கள்...
நேர்மையை எடுத்துச்சொல்வதால்
நெஞ்சினில் பட்ட
வெட்டுக்காயங்கள்...
இருப்பினும்
கலங்காமல் நானிருப்பேன்...
என் கண்ணீருக்கும்
விலை உண்டு...
பிறரை போட்டுக்கொடுத்தால்
நல்லவளாம்...
அநீதிகளை அறியாமல்
இருந்தால்
வல்லவலாம்...
பொய்யை உண்மைப்போல்
பேசினால்
கெட்டிக்காரியாம்...
இவற்றை செய்ய
மறுத்தால்
கெட்டவளாம்...
சீ ...! யாருக்கு
வேண்டும்
இந்த
போலி உலகின்
நல்லவள் பட்டம்.......
உலகுக்கு
கெட்டவள் தான் நான்...
உண்மைகளை உலகில்
உருவாக்கிய
உன்னத என் இறையோனுக்கே
நல்லவள் தான் நான்...
நான் நானாகவே
நடை போடுவேன்
நாளும்...
அநியாயக்காரர்களின்
கைகளில் நசுக்கப்டும்
புலுவாய் வாழ்வதை
விடுத்து...,தடுத்து...,
உண்மையாளர்களின்
உள்ளங்களில் என்றென்றும்
மலரும் நறுமண
மல்லிகையாய்
நானிருப்பேன்...
புரட்சிக்கான புதுவடிவம்
நான் படைப்பேன்...
கருத்துகள்
கருத்துரையிடுக