காதல் அழகானது காதல் அர்த்தமுள்ளது முதல்,இடை,கடை காதல் என கதை பேச உண்மை காதல் அறியாது... ஒருவர் மீது ஒருமுறை வருவதே காதல்... நம் காவியங்கள் சொல்லும் காதல் கதைகள் கூட அழகானவை, அர்த்தமுள்ளவை, கண்ணகிக்கோ கோவலன் மீது இருந்தது உண்மை காதல்... ஆனால் கோவலனுக்கோ மாதவி மீது ? அது காதலா? சீதைக்கு இராமன் மீது இருந்தது உண்மைக்காதல்... ஆனால் மாற்றான் மனைவியை சிறைபிடித்த இராவணுக்கு சீதை மீது? அது காதலா? பிற பெண்ணை நாடிச்சென்ற இராவணன் இறந்த போதே உடன் கட்டை ஏறிய மண்டோதரிக்கு இருந்தது உண்மை காதல்... மும்தாஜ் சாஜஹான் காதலை தாஜ்மஹால் சொல்லும்... சலீம் அனார்கலி காதலை கல்லறை சொல்லும்... காதல் அழகானது, காதல் அர்த்தமுள்ளது, நம் காப்பியங்கள் கற்பிக்கின்றன... ஒருவர் மீது ஒருமுறை பிறப்பதே உண்மைக் காதல்... உணர்வுகளின் ஆணிவேர், உயிருள்ள வரை உள்ள இதயத்துடிப்பு...
கருத்துகள்
கருத்துரையிடுக