இடுகைகள்

வாழாமல் பல நாள்....

படம்
கூண்டினுள் குருவியாய் தொட்டிக்குள் மீனாய் வேடன் கையில் மானாய் என என் வாழ்க்கை நாட்களில் வாழாமலே பல நாள்... நாளைய நம்பிக்கையும் இலட்சியங்களும் இலட்சங்களாய் எதிர்கால எதிர்ப்பார்புக்களும் உடன் கனவும் கற்பனையுமாய் கரைகிறதே... 'வயதுக்கு வந்தவள் வாசல் படி தாண்டலாகாது' என சம்பிரதாயங்களுக்கும் 'இளம் வயதில் திருமணம்' என மூடநம்பிக்கைகளுக்கும் மத்தியில் நூல் கொண்டு இயக்கப்படும் 'பாவையாய்' வாழ்க்கை நாட்களில் வாழாமலே பல நாள்... கலியாணப் பூஜையில் காகிதப்பூவாய் மணமின்றி நான்... திருமணதாலி திரையாய் எதிர்காலத்தை மறைக்க கை தலம் பற்றி தீ வலம் வர கை நழுவி கருகியது இலட்சியங்கள்... அம்மி மிதிக்கையில் மிதியுண்டது எதிர்பார்ப்புக்கள்... அதனால் என் வாழ்க்கை நாட்களில் வாழாமலே பல நாள்... காற்றில் சிக்குண்டு எரிந்தும்,அணைந்தும் போகும் தீபமாய் நான் இன்று...      நன்றி      தினகரன்                          அப்புத்தளை அப்பாஸ்

பள்ளி நாட்களில் ...

பள்ளி நாட்களில் வெள்ளை ஆடையில் பாடம் கற்று தொல்லைகள் செய்தும் நல்லப் பிள்ளைகளாய் பெயர் போட்டோம்... கணித பாடத்தை கட் பண்ண கணக்குப் போட்டோம், தமிழ் பாடத்தில் தப்பாய் பொய்சொல்லி தப்பித்துச் சென்றோம், விஞ்ஞான பாடத்தில் விந்தையான சேட்டைகளால் விளக்கம் பெற தவரினோம், ஆங்கிலத்தை அரைகுறையாய் கற்று ஆசானையே அதிரவைத்தோம்... எல்லா நாளும் நல்ல நாளானது படிக்கத் தவறிய பள்ளி வாழ்வில்... ஆதலால் இன்று இல்லை  தொழில், தொல்லை வாழ்க்கை என்றானது அன்று பள்ளி நாட்களில் படிக்கத் தவறியதால்...

வாழ்க்கை

விளையருவியாய்த் தொடங்கி கிளையருவிகளுடன் இணைந்தே தலையருவியாய் மாறி ஈற்றில் கடலுடன் கலக்கும் நெடுதூரப் பயணம்...      நன்றி      தினகரன்                          அப்புத்தளை அப்பாஸ்

வெயில்

இரவில் தங்கை வெண்நிலவுக்கு தரணியில் சிலர் காதல் கடிதம் எழுதியதால் பகலில் அண்ணன் கதிரவனு கடும் சினத்தால் தன் கதிர் கரங்களால் சுட்டெரிக்கிறான்.   நன்றி   தினகரன்

எழுத்தாளன்

வெள்ளை சேலையுடன் விலகி செல்லும் விதவையின் தலையெழுத்தை மாற்ற பேனாமுனைக் கொண்டு போராடும் வீரன்...      நன்றி     தினகரன்

வறுமை

எரிந்த அடுப்போ அணைய பசியெனும் நெருப்போ வயிற்றில் எரிய, வருகை தந்தவன்...

மழை

காலநிலையே என்ன உன் கோலம் மழையே..... மழையே, இடையிடையே நீ விருந்தாளியாய் வந்தால் வரவேற்போம் உன்னை... நீயோ... இடைவிடாமல் தொந்தரவு செய்வதேன்? உஸ்சென பெய்வதால் பஸ்ஸிலும் செல்ல முடியவில்லை... தொடர்ந்து பெய்வதால் தொடரூந்தும் தடைப்பட்டு விட்டது... மலையகத்தில் மண்சரிவில் வாடிவீடுகளுமாம், மன்னாரில் வெள்ளத்தில் மாடிவீடுகளுமாம், மரங்கள் முறிந்ததால் மனங்கள் உடைந்த மக்களுமாம்,  நல்ல மழையில் நனைந்ததால் பள்ளி செல்லமுடியா செல்ல குழந்தைகளுமாம், என என்னே உன் கோலம் மழையே....