வாழாமல் பல நாள்....

கூண்டினுள் குருவியாய்
தொட்டிக்குள் மீனாய்
வேடன் கையில் மானாய்
என என்
வாழ்க்கை நாட்களில்
வாழாமலே பல நாள்...

நாளைய நம்பிக்கையும்
இலட்சியங்களும் இலட்சங்களாய்
எதிர்கால எதிர்ப்பார்புக்களும்
உடன்
கனவும் கற்பனையுமாய்
கரைகிறதே...

'வயதுக்கு வந்தவள்
வாசல் படி தாண்டலாகாது'
என சம்பிரதாயங்களுக்கும்
'இளம் வயதில் திருமணம்' என
மூடநம்பிக்கைகளுக்கும் மத்தியில்
நூல் கொண்டு
இயக்கப்படும் 'பாவையாய்'
வாழ்க்கை நாட்களில்
வாழாமலே பல நாள்...

கலியாணப் பூஜையில்
காகிதப்பூவாய்
மணமின்றி நான்...

திருமணதாலி
திரையாய் எதிர்காலத்தை மறைக்க
கை தலம் பற்றி
தீ வலம் வர
கை நழுவி கருகியது
இலட்சியங்கள்...
அம்மி மிதிக்கையில்
மிதியுண்டது எதிர்பார்ப்புக்கள்...
அதனால்
என் வாழ்க்கை நாட்களில்
வாழாமலே பல நாள்...
காற்றில் சிக்குண்டு
எரிந்தும்,அணைந்தும் போகும்
தீபமாய்
நான் இன்று...
     நன்றி
     தினகரன்
                         அப்புத்தளை அப்பாஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்