பள்ளி நாட்களில் ...

பள்ளி நாட்களில்
வெள்ளை ஆடையில்
பாடம் கற்று
தொல்லைகள் செய்தும்
நல்லப் பிள்ளைகளாய்
பெயர் போட்டோம்...

கணித பாடத்தை
கட் பண்ண
கணக்குப் போட்டோம்,
தமிழ் பாடத்தில்
தப்பாய் பொய்சொல்லி
தப்பித்துச் சென்றோம்,
விஞ்ஞான பாடத்தில்
விந்தையான சேட்டைகளால்
விளக்கம் பெற தவரினோம்,
ஆங்கிலத்தை அரைகுறையாய் கற்று
ஆசானையே அதிரவைத்தோம்...

எல்லா நாளும்
நல்ல நாளானது
படிக்கத் தவறிய
பள்ளி வாழ்வில்...

ஆதலால் இன்று
இல்லை  தொழில்,
தொல்லை வாழ்க்கை
என்றானது
அன்று
பள்ளி நாட்களில்
படிக்கத் தவறியதால்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்