இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

படம்
  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Ur1jpKKEfG1VDWL2p37RtX6q6UxGFoPTe1iozc8dDLfX2NyNAnqexc95TZrTNDy3l&id=100063695766377

காதல்

 காதல் அழகானது  காதல் அர்த்தமுள்ளது  முதல்,இடை,கடை காதல் என கதை பேச உண்மை காதல் அறியாது... ஒருவர் மீது ஒருமுறை வருவதே காதல்... நம் காவியங்கள் சொல்லும் காதல்  கதைகள் கூட  அழகானவை, அர்த்தமுள்ளவை, கண்ணகிக்கோ கோவலன்  மீது இருந்தது  உண்மை காதல்... ஆனால்  கோவலனுக்கோ  மாதவி மீது ? அது காதலா? சீதைக்கு இராமன்  மீது இருந்தது  உண்மைக்காதல்... ஆனால்  மாற்றான்  மனைவியை சிறைபிடித்த  இராவணுக்கு  சீதை மீது? அது காதலா? பிற பெண்ணை நாடிச்சென்ற  இராவணன்   இறந்த போதே  உடன் கட்டை ஏறிய மண்டோதரிக்கு  இருந்தது  உண்மை காதல்... மும்தாஜ் சாஜஹான் காதலை தாஜ்மஹால்  சொல்லும்... சலீம் அனார்கலி  காதலை கல்லறை  சொல்லும்... காதல் அழகானது,  காதல் அர்த்தமுள்ளது,  நம் காப்பியங்கள் கற்பிக்கின்றன... ஒருவர் மீது  ஒருமுறை பிறப்பதே  உண்மைக் காதல்... உணர்வுகளின் ஆணிவேர்,  உயிருள்ள வரை  உள்ள இதயத்துடிப்பு...

யதார்த்தம்

 நல்லவர்க்கு  காலமில்லை நாளும்... பொய்பேசுவோர்  போற்றப்படும் போது  உண்மை பேசுவதால்  ஊமை அடி எனக்கே... நாளுபேர்க்கு மத்தியில்  ஞாயத்தையே பேசி  என் முதுகில்  தீக்காயங்கள்... நேர்மையை எடுத்துச்சொல்வதால்  நெஞ்சினில் பட்ட வெட்டுக்காயங்கள்... இருப்பினும்  கலங்காமல் நானிருப்பேன்... என் கண்ணீருக்கும்  விலை உண்டு... பிறரை போட்டுக்கொடுத்தால்  நல்லவளாம்... அநீதிகளை அறியாமல்  இருந்தால்  வல்லவலாம்... பொய்யை உண்மைப்போல்  பேசினால்  கெட்டிக்காரியாம்... இவற்றை செய்ய மறுத்தால்  கெட்டவளாம்... சீ ...! யாருக்கு  வேண்டும்  இந்த போலி உலகின்  நல்லவள் பட்டம்....... உலகுக்கு கெட்டவள் தான் நான்... உண்மைகளை உலகில்  உருவாக்கிய உன்னத என் இறையோனுக்கே  நல்லவள் தான் நான்... நான் நானாகவே நடை போடுவேன்  நாளும்... அநியாயக்காரர்களின்  கைகளில் நசுக்கப்டும்  புலுவாய் வாழ்வதை  விடுத்து...,தடுத்து..., உண்மையாளர்களின்  உள்ளங்களில் என்றென்றும்  மலரும் நறுமண  மல்லிகையாய் நானிருப்பேன்... ப...

கல்கி

 பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான்  வாழ்வடி  கொல்லாமலே கொல்வாரடி  குற்றங்கள் சொல்வாரடி  வராத துன்பம்  வாழ்விலே வந்தாலும்  நீ மோது  பெறாத வெற்றி  இல்லையே  என்றே நீ  வேதம் ஓது  ஊமைக்கும் நாக்குகள்  வேண்டுமடி  உரிமைக்கு போரிட  தேவையடி  தொடாமலே சுடும்  கனல் நீயே...

உலகம்

படம்
  இரு ரோஜாக்கள்  உலகிடம் கேட்கின்றன,  கருமையா? கலரிதழ்களா? உம்மை கவருவது என்று, உலகின் தெரிவு சிவப்பு ரோஜாதான் இன்று... மனிதன் விரும்புவது  நல்ல மனங்களை அல்ல... மாறாக கண்களை கவரும்  காட்சிகளை அன்றோ?

நன்றி கெட்ட மனிதா

 நன்றி கெட்ட  மனிதர் வாழும்  உலகம் இது... நீ எவ்வளவு  தான் செய்தாலும்  என்னதான் செய்தாய்  என்று கேட்கும்  உடைந்து போகாமல்  பதில் சொல்ல  கற்றுக்கொள்... பொய் முகங்களுள்  உள்ள... போலிச்சிரிப்புக்களுள்  எத்தனை முறை  தான் ஏமாறுவது... விழித்துக்கொள்... நன்றி கெட்ட  மனிதர்களுடன் நடை  போடுகையில்  கால்களும் பின்னுகின்றன... என்னே இந்த  மனிதர் என... வீதியில் ஒருபிடி சோறிட்ட சொறிநாய் கூட நன்றி உணர்வோடு  கண்ட இடத்தில்  வாலையாவது ஆட்டும்... ஒரு போதும்  மனிதனை  சீ நாயே என திட்டி விடாதீர்  ஏனெனில் நன்றி உணர்வில் நாய்  மனிதனை விட மேலானது...

விளம்பரம்

 https://chat.whatsapp.com/B6hDrFT1uhT86cAchnJluI https://chat.whatsapp.com/B6hDrFT1uhT86cAchnJluI

விளம்பரம்

படம்
https://www.facebook.com/Bussines-106629401167984/ https://www.facebook.com/Bussines-106629401167984/

தனிமை

படம்
 தனிமை என் நெருங்கிய  தோழி...  மனதின்  ஆழத்தை விசாரித்து மன அமைதியை  அமைத்திடும் அதிசயம்... கவலைகள்  அலைபாயும் போது நிலைகுலைந்த நிம்மதியை  நிதானமாய் ஏற்படுத்தும்  ஓர் வித்தை... எத்தனை பேர் எம்மை சுற்றி நின்றாலும்... ஆறுதலாய்  ஆயிரம்  வார்த்தைகள் வந்தாலும்... அத்தனையும் அசந்துபோகும் அபூர்வம்... கவலைகளை  கண்டெடுக்கும் தனிமை... கண்ணீரை  துடைத்தெறியும் தனிமை... இன்பத்தில்  இசை மீட்டும் தனிமை... காதலனுடன்  கதை பேசும் தனிமை... உன் திறமையை  உனக்குள் விதைக்கும் தனிமை... இனியென்ன  தனிமை என் உயிர் தோழி... நான் தனிமையின் ராணி...

மழலை

படம்
 

ஆசானே...

 ஏணியாய்  எம்மை ஏற்றிவிடும்... தோணியாய்  கல்வி கரையை காட்டிவிடும்... தீயாக தீபங்களே... எம் ஆசான்களே... கற்க வரும் பிள்ளைகளும்  பெற்றெடுத்த  பிள்ளைப்போல்... உறவாடி  கல்வியிலாளராய்  உருவாக... விந்தை செய்யும்  வியப்பான மாந்தரே  எம் ஆசான்களே... உம்மை வாழ்த்துகிறேன்... போற்றுகிறோம்... நீடூழி காலம் வாழ்கவென  வாழ்த்துப்பா பாடுகிறோம்  அன்பு ஆசான்களே....

மறதி வேண்டும்

படம்
 

கவித்துவம்

படம்
 கவித்துவம் மிக்க சில வரிகள்...

கவர்ந்த கவிவரிகள்

படம்
 எத்தனை வரிகளை  நான் இரசித்து ருசித்து  யாத்தாலும்  என்னவோ  என்னை கவர்ந்த வரிகள்  இவை...