இடுகைகள்

குழந்தை

படம்
  குழந்தை என்ற வெள்ளைக்கடதாசி  என் கையில்... குழந்தை  என்ற ஓவியம்  வரையட்டுமாம் எனக்கு... அன்பு என்ற  பென்சில் கூரால்  கோடுகள் வரைகிறேன்... மழலை மொழி, குறும்புத்தனம், பிடிவாதம் , சின்னச்சின்னக் கோபம்,  அன்புச்சண்டைகள்  போன்ற வர்ணங்களை  தீட்டி முடிக்கிறேன்.  இதோ ஓர் அழகான குழந்தை  ஓவியம் தயார்...

எளிமை

 https://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1m https://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1m எளிமை  மிக அழகானது... வாழ்க்கையை  எளிமையாக  இரசித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்... இருப்பதை வைத்து  இயற்கைக்கு  நன்றி சொல்லுங்கள்... ஆடம்பர வாழ்வை தேடி  கொட்டிக்கிடக்கும்  சிறு சிறு இன்பங்களை  இழந்து விடாதீர்... பல பிரச்சனைகள்  நாம் ஆடம்பரத்தால்  வருவன... பல நிம்மதிகள்  நாம் இருப்பதை  வைத்து  பறப்பதற்கு ஆசைபடாமல்  இருப்பதால்  வருவன என்பதை  கற்றுக்கொண்டாலே... வாழ்க்கை இன்ப  வரமாகும்... மாட மாளிகையிலும்  கோடகோபுரத்திலும்  இல்லாத இன்பம்  மண்வீட்டில் அன்போடு  வாழ்வதில் கிடைக்கும்... லக்சரி ஆட்டல்களில்  கிடைக்காத இன்பம்  அன்பானவருடன்  அன்பை பரிமாரி  ஒருபொழுதேனும் ஒன்றாய்  உண்ணுவதில் கிடைக்கும்... பல இலட்சங்களை  செலவளித்து செல்லும்  சுற்றுலாக்களில் கிடைக்காத  இன்பம்  அன்பு உறவுகளை  தேடிசெல்வதில் கிடைக்கும்... இப்படி வாழ்ந்து  பாருங்கள்...

மழையே

 https://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7V https://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7V https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4 https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4 மழையின் ஓசை இசையில்... காற்று வீசும் திசையில்... பனிமூடிய ஒரு பொழுதில் ... சில்லென ஒரு குளிரில்... சுடச்சுட ஆவி பறக்கும் ஓர்  தேநீர் கோப்பையுடன்... என் வீட்டு  யன்னலோரத்தில்... இதமான ஏதோ ஓர் நினைவுடன்..., ஆகா...! எத்தனை எத்தனை  அழகு...! அந்த மழைப்பொழுது...
 https://youtu.be/2GAfeOv29dQ?si=tUnC-aZHAN2UfWSQ https://youtu.be/2GAfeOv29dQ?si=tUnC-aZHAN2UfWSQ https://youtu.be/gR9QkVcyZ7I?si=GdQXfwepFQBz4dAC https://youtu.be/gR9QkVcyZ7I?si=GdQXfwepFQBz4dAC

உன்னை காதலிக்கிறேன்...

படம்
  வெட்கமாய்  உள்ளது ... என்னவென்று சொல்வேன் என் காதலை, எத்தனை எத்தனை ஆண்டுகள், எத்தனை எத்தனை நாட்கள், சொல்ல எத்தனித்தேன்... சொல்ல வந்த பொழுதுகள் எல்லாம்  என்னை தட்டிவிட்டு  சென்றன... சொல்லட்டுமா? நீ அழகாய் இருக்கிறாய்... நான் உன்னை இரசிக்கிறேன்... நான்  உன்னை விட்டு விட்டு  சென்றாலும்... எப்படியாவது என்னை தொடர்கிறாய்... கவலை பொழுதுகளிலெல்லாம்  ஏதோ ஒருவிதத்தில்  ஆறுதல் ஆகிறாய்... இன்ப நொடிகளில்  ஏதோ ஒரு இனம் புரியா  இசையை மீட்டுகிறாய்... ஆகவே பல காலம் என் நினைவுகளோடு  நடை போடும் உன்னை, நண்பனாய் ஏற்பதா  காதலனாய் ஏற்பதா  இதயத்திடம் கேட்கிறேன்... பதில் கிடைத்து விட்டது  இப்போது... நான் விலகி சென்றாலும்  நீ மீண்டும் மீண்டும் என்னை தேடி வருகிறாய்... பிடித்திருக்கிறது உன்னை... காதலை சொல்லட்டுமா? உன்னை காதலிக்கிறேன்... என் காதலை  ஏற்றுக்கொள்  தனிமையே... இப்படிக்கு உன் புதிய காதலி,,!
 https://youtube.com/shorts/ymYUrFAyDtg?si=t-phNRUav8q9RpD9 https://youtube.com/shorts/ymYUrFAyDtg?si=t-phNRUav8q9RpD9
 https://youtube.com/shorts/nBpRk-5hb0E?si=U5Z90GNlDkTQ1re1 https://youtube.com/shorts/nBpRk-5hb0E?si=U5Z90GNlDkTQ1re1 https://youtube.com/shorts/gIMDdg3r_YM?si=YTXNZ21fKTdDKFx1 https://youtube.com/shorts/gIMDdg3r_YM?si=YTXNZ21fKTdDKFx1 https://youtube.com/shorts/SVZ6P7PotYI?si=0EosWXD7q_6pvpQJ https://youtube.com/shorts/SVZ6P7PotYI?si=0EosWXD7q_6pvpQJ