சொந்தங்கள்
எவ்வளவு சொந்தங்கள்
உனக்கு
என ஓர் வினா
எனக்கு
விரல் விட்டு
எண்ணமுடியவில்லை
ஊரில்
என்னை கண்டதும்
வாலையாட்டி கூடவே
வலம்வரும்
அத்தனையுமே என் சொந்தங்கள்
என்றேன்
ஓர் கோபப்பார்வையுடன்
இதென்ன புதுக்கதை
என இன்னோர் வினா...
எத்தனையோ
சொந்தங்களுக்கு
என்னால் இயன்ற
அத்தனையும்
செய்தும்
இறுதியில் பகைமட்டுமே
தொடர்கின்றன என்னுடன் ,
எப்போதோ...எங்கேயோ...
உணவளித்த
நாய்கள்
கண்டவுடன் என்னுடன்
வாலாட்டி வலம்
வருகின்றன...
இப்போது சொல்கிறேன்
என் மீது
நன்றியுணர்வுள்ள
நாய்கள்
எவ்வளவோ
அவ்வளவும்
என் சொந்தங்கள்...

கருத்துகள்
கருத்துரையிடுக