நிலாவை நனைத்த மழை

 



நிலவை நனைத்த மழை


அவள் நிலவு

வெள்ளை சேலையில் 


விதவையாய் சோலையில்

நிதம் தனிமையில்...


கலியாணம் ஆகாமலே

விதவை ஆனவள்


பூவையும் பொட்டையும் 

பறித்துக் கொண்டது 


கல்யாண வாழ்க்கையல்ல

காதல் நினைவுகளே ...


பார்வைகள் பற்றிக்கொள்ள 

இதையங்கள் ஒற்றிக்கொள்ள 


காதல் கதை

காவியம் படைக்க


ஈருடல் ஓர்

உயிராய் ஒன்றாய்


வாழ்ந்தால் உன்னோடு

இறந்தால் உன்நினைவோடு 


காதலில் சேர

கலியாணம் நேர


போர்கள கைதிகளாய் 

களத்தில் 


எதிர்ப்புக்கு மத்தியில் 

உதிர்ப்பு காதலில் 


வருமென காத்திருப்பு 

உள்ளங்கள் பூத்திருப்பு 


காலம் கரையட்டும் 

கைப்பிடிக்க 


காதலோடு வருவதாய் 

சொன்னவனுக்காய் காத்திருந்து

விதவையானால் அவள்...


அவன் நினைவுகளோடு 

நனைகிறாள்  

நிலாவை நனைத்த மழையாய்

அவன் தந்த

காதல்  நினைவுகள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்