மறப்பேனா!

அதிபரே!

என் மானசீக குருவே!

என் தந்தையே!

இதய வலியில்

என் விழிநீரில் 

உமக்கோர் கீதம்...,

தரம் 6 ல் 

உம்மை ஓர் 

கணித ஆசானாய் 

கண்டேன்...,

தந்தையில் 

எனக்கோர் தந்தையாய் 

அன்பு காட்டி

கணிதத்தை 

இனிதாய் கற்பித்தீர்!

என் தம்பியை வீடு நாடி

தேடி வந்து அழைத்து சென்று

கற்பித்தீர்!

உங்கள் வெளிநாட்டு 

பயண அன்பளிப்பு 

என் தம்பிக்கு!

இன்னும் காதுக்குள் 

இசைமீட்டும் அந்த

ரேடியோ!

அண்மையில் தம்பியின் 

சிறுவயது புகைப்படம்

எனக்கணுப்பி மகிழ்ந்தீர் 

மறப்பேனா!

தொல்லைகளால் துவண்டு 

தொழிலை விட்டுவிட 

நினைக்கையில்

என்னை என் 

பாடசாலைக்கே எடுத்து 

மாணாக்கருக்கு சேவை செய்ய

கற்றுக்கொடுத்த மகான்

நீங்களே!

அன்பை அடிமனதில் 

ஆழப்புதைத்து 

அதிகார தொனியில் 

என் பெயரை 

அடிக்கடி உச்சரிப்பது 

இன்னும் என் காதுகளில் 

கணீரென!

உங்களுக்கான 

என் பணிநிறைவு கவிதைக்கு

உங்கள் வாழ்த்து 

இன்னும் என் விழிகளில்!

இத்தனையும் இந்த 

நிரந்தர பிரிவிற்கா!

நான் 

இழந்தது

இதயபூர்வமாய் சொல்கிறேன்...,

அதிபரை மட்டுமல்ல,

என் மானசீக குருவை,

என் அன்பு தந்தையை...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்