முதல் முத்தம்

 

பல நாள்

தவமிருந்து தாய்மையடைந்தேன், 

ஒவ்வொரு நாளும் 

புதுப்புது வலிகளை 

சந்தித்தேன்...

வலிகளை எல்லாம்

சுகமாய் உணர்ந்தேன்...

ஆணா,பெண்ணா 

என்றனரெல்லாம்...

ஆணென்ன பெண்ணென்ன 

என் மழலை

உனக்காய்...

நாளெண்ணி நானிருந்தேன்...

எட்டுமாத ஈற்றில்

என்னை எட்டி

உதைத்தாய்...

உன் பஞ்சுப்பாதத்தை 

பக்குவமாய் பிடித்து

உணர்ந்தேன்...

என்று உன்

பிஞ்சு விரல்

பிடிப்பேன் என்றிருந்தேன்...

மரணவலிக்கு சென்றேன் 

மீண்டும் மறுப்பிறப்பெடுத்தேன்...

பாதிமயக்கத்தோடு 

முதன்முதலில் 

உன்னை அள்ளி எடுத்தேன்...

உன் நெற்றியில் 

நான் இட்ட 

முதல் முத்தம் அது...

இன்னும் என்னுள் 

இனிக்கிறது...

இன்று என்னை

ஆட்டிப்படைக்கும் 

அன்பு இளவரசியே....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்