இதய வரிகள்...
மதிப்பிற்குரிய அன்பான அதிபரே, நாம் பயமின்றி உம் பின்னால் பயணித்த பாதையில் பாதி வழியில் ஓய்வெடுக்க நின்றுவிட்டீர்... எம் கால்கள் ஏதோ பயத்தால் முன் வைக்க மறுக்கின்றன... பாடசாலை வாயில் கூட உம் வெற்றிடத்தால் தனிமையில் தவிக்கின்றது... ஓர் நல்லாசான் மாணவர்களின் இதயங்களில் வாழ்வார்... ஓர் நல்லதிபர் மாணாக்கர்,ஆசான்கள், ஏன் சமுகத்தினர் அனைவரினதும் உள்ளங்களிலும் உயிரோட்டமாய் என்றென்றும் வாழ்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு நீரே, உம்மில் நாம் பெற்ற முன்மாதிரிகள் பல, அவற்றை உயிர்பெற செய்வோம், உம் வழி செல்வோம், என்றென்றும் நலமுடன், வளமுடன், பலமுடன், மனமகிழ்வுடன், நீண்ட ஆயுள் வாழ இறைவனை இனிதே பிரார்த்திக்கின்றோம்...